Paleo Diet 15 Days Challenge | Tamil | Day 9 Lunch with Diet Recipes | World's Best Weight Loss Diet

இறால் மீன்கள் மிக ருசியான கடல் உணவு வகைகளில் இதுவும் ஒன்று எந்தவித சிறமமும் இன்றி அப்படியே சாப்பிலாம். மார்கெட்டில் இதன் விலையும் அதிகம். இறால் மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்களை பற்றி சித்தர்கள் என்ன சொல்லியுள்ளார்கள் என்று பார்ப்போம்.

சித்தர்கள் இறால் மீன்களை பற்றி மிக தெளிவாக தங்களின் பாடல்களில் கூறியுள்ளனர். இறால் மீன் சாப்பிடுவதால் பெரிதாக எந்த விதமான நன்மையும் இல்லை அதனால் உடலுக்கு கேடுதான் உண்டாகும் என்று அவர்களின் நூல்கள் காண முடிகிறது.

தோல் நோய் உள்ளவர்கள் அதாவது சொறி, சிரங்கு, படை, அரிப்பு, ஒவ்வாமை இவற்றால் பாதிக்கபட்டவர்கள் இதை அறவே நீக்க வேண்டும் என்றும். குறிப்பாக நோய் குணமாக மூலிகை அல்லது பாஷான மருந்து உண்பவர்கள் இறால் மீன் சாப்பிட்டால் அம்மருந்து எவ்வித பலனையும் தாராது என்றும் விவரிக்கின்றனர்.

சித்தர் பாடல்

உ.த

வாதமொடு மந்தமுறு மாறப் பொருமன்மிகுஞ்

சீதம் விளையுந் தினவுண்டா-மாதே

யுதிர மிகப்பெருகு மோங்குமிறா லூண்டா

லெதிரிலங்க ராங்கிசமா மெண்.

இறால் மீன் சாப்பிடுவதால் உண்டாகும் தீமைகள்

அக்னி மந்தம்

வியிற்று உப்பிசம்

சீதளம்,

தோல் அரிப்பு,

ரத்த மாமிச தாது இவைகள் உண்டாகும்.

இறால் மீன் சாப்பிட வேண்டிய முறை

கடலில் இருந்து கிடைக்க கூடிய இறால் மீன்களை பாகப்படி சமைத்து உண்ண மேற் கூறிய சித்தர் பாடலில் கூறப்பட்ட குணங்கள் உண்டாகும் மாற்றம் இல்லை.

உண்ண விரும்பினால் பெரிய இறால் மீன்களை வாங்கி சமைத்து சாப்பிட வேண்டாம் இதில் மிகுதியான மேற்கூறிய பாதிப்பு உண்டாம். ஆகையால் பொடி இறால் மீன்களை வாங்கி உபயோக படுத்தினால் அதிக கெடுதலை உண்டாக்காது. குறிப்பாக மருந்து உண்ணும் காலங்களில் இறால் மீன்களை கண்டிப்பாக தவிர்க வேண்டும். இல்லை யெனில் ஒளசதம் பயன் தராது.

Recommended Reading >> bit.ly/32kRpzw

Comments